ட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட பிரதான கட்சிகள் தீவிரம் காட்டிவரும் நிலையில், அதேரீதியில் கவனம் செலுத்தி வருகிறார் த.வெ.க. தலைவர் நடிகர் விஜய். அதற்காக கட்சி யின் இரண்டாவது மாநில மாநாட்டை மதுரையில் நடத்த தேதி குறித்த சூழலில், அந்த மாநாட்டிற்கு தடை விதிக்கப் படுமா? தள்ளி வைக்கப்படுமா? என்கிற தவிப்பில் அப்செட்டாகி யிருக்கிறார் அவர். 

த.வெ.க. துவக்கப்பட்டதி லிருந்து கட்சியின் ஒவ்வொரு நட வடிக்கைகளையும் தி.மு.க. பாணியி லேயே நகர்த்திவருகிறார் விஜய். கொள் கைகளை வடிவமைப்பதில் தொடங்கி, தற்போது கட்சிக்கு உறுப்பினர்கள் சேர்க்கைக்கான (ஆப் மூலம் சேர்த்தல்) ஐடியாக்கள் வரை தி.மு.க.வின் பாணியிலேயே இருந்துவருகிறது. 

திமுகவின் பொதுக்குழு சமீபத்தில் மதுரை யில் நடத்தப்பட்டது. அதேபோல தனது கட்சியின் இரண்டாவது மாநில மாநாட்டை மதுரையில் நடத்த தீர்மானித்தார் விஜய். இதற்கான ஏற்பாடுகளை கவனிக்கச்சொல்லி உத்தரவிட்டார். ஆகஸ்ட் 25-ல்  நடத்த முடிவெடுக்கப்பட்டது. 

Advertisment

மாநாட்டிற்கான முறையான அனுமதியும் பாதுகாப்பும் கேட்டு மதுரை மாவட்ட காவல் துறை எஸ்.பி. அரவிந்தனிடம் கடிதம் கொடுத் தார் த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த். 

15 நாட்களுக்கு மேலாகியும் அனுமதி குறித்து முடிவு எதுவும் தெரியாத நிலை யில், போலீஸ் எஸ்.பி.யை 29-ந் தேதி சந்தித்த புஸ்ஸி ஆனந்த், "அனுமதி விசயத்தில் ஏன் காலதாமதம் செய்கிறீர்கள்?'' என்று கேட்க, "மாநாட்டிற்கு தேதியை தீர்மானிக்கிற போது, அந்த தேதியில் மற்றும் அந்த தேதியை ஒட்டிய நாட்களில் ஏதேனும் முக்கிய நிகழ்வுகள் இருக்கிறதா? என்பதை ஆராய மாட்டீர்களா? ஆகஸ்ட் 27-ந் தேதி விநாயகர் சதுர்த்தி நடக்கிறது. நீங்கள் 25-ந் தேதி மாநாடு வைத்திருக்கிறீர்கள்? எப்படி நாங்கள் அனுமதி தரமுடியும்?'' என்றிருக் கிறார் எஸ்.பி. அரவிந்த்.

அதற்கு, "சதுர்த்திக்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாகத்தானே நாங்கள் மாநாடு நடத்துறோம்'' என்று எதிர்கேள்வி கேட்டுள்ளார் புஸ்ஸி. இதனை ஏற்காத எஸ்.பி. அரவிந்த், "நாட்டு நடப்பு எதுவும் தெரியாம பேசறீங்க. விநாயக சதுர்த்தி வரு கிறதுன்னா, ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனிக்கவேண்டும். இதில் உங்களுக்கு எங்கே நாங்கள் பாதுகாப்புத் தரமுடியும்? இந்த தேதியில் மாநாடு நடத்தினால் எங்க ளால் போதிய பாதுகாப்புத் தர முடியாது, தடை தான் விதிப் போம். அதனால,  மாநாட்டை தள்ளி வைத்துக்கொள்ளுங்கள்'' என அழுத்தமாகத் தெரிவித்திருக்கிறார். 

Advertisment

இந்த தகவல்களை விஜய்க்கு புஸ்ஸி ஆனந்த் பாஸ் பண்ண, அதையறிந்து அப்செட்டானதுடன் அவரிடம் கடுமையாகக் கோபித்தும்கொண்டார் விஜய். 

vijay1

இதில் அப்-செட்டாவதற்கும் கோபம்கொள் வதற்கும் என்ன இருக்கிறது? என்று விபரமறிந்த த.வெ.க. நிர்வாகிகளிடம் விசாரித்தபோது, ‘"சினிமாவாக இருந்தாலும், கட்சியாக இருந்தாலும் முக்கியமான முடிவுகள் எடுப்பதற்கு முன்பு தனது ஆஸ்தான ஜோதிடரிடம் விவாதிப்பதை வழக்க மாக வைத்திருப்பவர் விஜய். அதனால், கட்சியின் அனைத்து முக்கிய செயல்பாடுகளிலும் ஜோதிட ரின் பங்கு இருக்கிறது. அந்த வகையில், இரண்டா வது மாநில மாநாட்டை எங்கு நடத்துவது? எந்த தேதியில் நடத்துவது? என ஜோதிடரின் ஆலோ சனையைப் பெற்றிருக்கிறார் விஜய். அப்போது, "தென் திசையில் மாநாடு நடத்துங்கள் ; ஆகஸ்ட் 25-ந்தேதி உங்கள் ஜாதகத்தின்படி அற்புத மான நாள்' என்று குறித்துக் கொடுத் துள்ளார் ஜோதிடர். அதன்படிதான் அந்த தேதியை தீர்மானித்தார் விஜய். 

ஆனால், "தேதியை மாற் றுங்கள்' என போலீஸ் தரப்பில் சொல்லப்பட்டுவிட்டதால் ஜோதிடர் குறித்த தேதியில் மாநாடு நடத்த முடியாதோ? என்கிற கவலையில்தான் அப்செட்டாகியிருக்கிறார் விஜய். அதேசமயம், ஜோதிடர் தேதி குறித்தபோது, "27-ந்தேதி விநாயகர் சதுர்த்தி வருவதால் நமக்கு போலீஸ் அனுமதி கிடைக்காது; வேறுஒரு நல்ல தேதியை கேட்டு வாங்கலாம் என்கிற யோசனையை தன்னை சுற்றியிருப்பவர்கள் சொல்லியிருந்தால் அதனை பரிசீலித்திருக்கலாமே' என யோசித்த விஜய், அப்படி அவர்கள் யாரும் சொல்லாததால் எழுந்த எரிச்சலில்தான் புஸ்ஸி ஆனந்திடம் கோபப்பட்டிருக்கிறார்''’என்று விவரிக்கிறார்கள். 

அதேசமயம் உளவுத்துறை வட்டாரங்களில் விசாரித்தபோது, "விநாயகர் சதுர்த்தி வருவதைத் தெரிந்து, அதையொட்டி, மாநாட்டை நடத்தினால் தான் நமக்கான அனுமதியை போலீஸ் தரத் தயங்கும். அதனை வைத்து அரசியல் பண்ணலாம் என்றும், ஒருவேளை அனுமதி கிடைத்துவிட் டால், ஏதேனும் விரும்பத்தகாத சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்படலாம். அது தி.மு.க. அரசுக்கு எதிராக விமர்சிக்கப்படும் என்றும் திட்டமிட்டுத் தான் 25-ந் தேதியை தேர்வுசெய்தார் விஜய்.

அதாவது, "இந்துக்களின் விழாவான விநாயகர் சதுர்த்தியைப் பற்றி விஜய்க்கு கவலையில்லை என்பதுதான் உண்மை. இதெல்லாம் தெரிந்துதான், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில், மாநாட்டு தேதியை மாற்றியமையுங்கள் என விஜய் கட்சிக்குத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது'’என்று சுட்டிக்காட்டுகிறார்கள் உளவுத்துறையினர். 

இதற்கிடையே, நீதிமன்றத்தை அணுகி குறிப் பிட்ட தேதியில் மாநாட்டை நடத்துவதற்கான உத்தரவுகளைப் பெற முடியுமா? என்கிற ஆலோ சனையில் ஈடுபட்டுள்ள விஜய், மாநாடு எப்போது நடந்தாலும் சிறுபான்மை சமூகத்தினரை (முஸ்லீம் மற்றும் கிறிஸ்தவர்கள்) பெருமளவில் மாநாட்டில் திரட்டிக் காட்டவேண்டும் என்கிற திட்டத்தை நோக்கியும் விஜய்யின் அரசியல் நகர்ந்துகொண்டி ருக்கிறது. இதற்காக, தி.மு.க. கூட்டணியிலுள்ள முஸ்லீம் கட்சிகள் மற்றும்  தமிழகத்திலுள்ள முஸ்லீம் அமைப்புகள் ஆகியவற்றின் தலைவர்கள் பலர், விஜய்யை சந்திக்க விரும்பி நேரம் கேட்டுள்ளனர். இந்த நிலையில், இதுகுறித்த ஒரு ஆலோசனைக் கூட்டம் சென்னையில் சீக்ரெட்டாக நடந்து முடிந்திருக்கிறது. 

இந்த சீக்ரெட்டை அறிந்து முஸ்லீம் அமைப்புகளின் நிர்வாகிகளிடம் விசாரித்தபோது, ”"தமிழகத்தில் சிறுபான்மையினரின் பெரும் பான்மை ஆதரவு எப்போதும் தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ் கட்சிகளிடம்தான் இருந்துவருகிறது. பா.ஜ.க.வுடன், அ.தி.மு.க. கூட்டணி வைத்திருப்ப தால் அ.தி.மு.க.வை எட்டிக்காயாகத்தான் இப்போது நாங்கள் பார்க்கிறோம். அந்த வகையில், சிறுபான்மையினரின் ஆதரவு தற்போது தி.மு.க.விடமும் காங்கிரசிடமும் இருக்கின்றது. 

இப்படிப்பட்ட சூழலில், விஜய் கட்சி ஆரம் பித்தார். அவர் மீது சிறுபான்மையினரின் பார்வையும் பதியத் தொடங்கியது. பா.ஜ.க.வுக்கு எதிராக இருப்பதால் விஜய்க்கான வாக்கு வங்கி என்பது சிறுபான்மையினர் மற்றும் பட்டியலினத் தவர்களின் ஆதரவும் தான். ஆக, இந்த இரண்டு தரப்புகளையும் உள்ளடக்கிய அரசியல் கட்சிகள் (முஸ்லீம் கட்சிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள்) தி.மு.க. கூட்டணியில் இருக்கின்றன. 

அந்த வகையில், முதலில் சிறுபான்மையினரை தங்கள் பக்கம் ஈர்க்கத் திட்டமிட்ட விஜய், அக்கட்சி களின் தலைவர்களிடம் பேசிப்பார்க்கச் சொல்லி யிருக்கிறார். அதன்படி வேவு பார்க்கப்பட்டது. இதனை உணர்ந்த முஸ்லீம் அரசியல் கட்சிகளும், முஸ்லீம் அமைப்புகளும், முதலில் விஜய்யை நேரடியாக நாங்கள் சந்திக்க வேண்டும்; அவரிட மிருந்து சில உறுதிமொழிகள் தேவை. ஏனெனில், அவர் மீது எங்களுக்குள்ள சந்தேகம் முற்றிலும் விலகவில்லை. எங்களின் சந்தேகங்களுக்கு விடை தெரிந்துவிட்டால், அடுத்த அரசியல் நகர்வுகள் குறித்து மனம் திறந்து விவாதிக்கலாம். அதனால், விஜய்யுடனான நேரடி சந்திப்புக்கு ஏற்பாடு செய்யுங்கள் என்று விஜய்க்கு நெருக்கமானவர் களிடம் தெரிவித்துள்ளனர் எங்கள் அமைப்புகளின் தலைவர்கள். 

இந்த நிலையில்தான், த.வெ.க.வை நோக்கி முஸ்லீம் அமைப்புகள் நகரத் தொடங்கு வதை அறிந்த காங்கிரஸ் கட்சி, ஒருவேளை விஜய்யை ஆதரிக் கும் முடிவுகளை முஸ்லீம் தலை வர்கள் எடுத்துவிட்டால், தங்கள் கட்சியின் வாக்கு வங்கியில் சேதாரம் ஏற்பட்டுவிடுமே என யோசித்து அவசரம் அவசரமாக, மதிய விருந்துடன் கூடிய ஒரு ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியது. 

காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் நடந்த அந்த கூட்டத்தில், தி.மு.க. கூட்டணியிலுள்ள மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, முஸ்லீம் லீக் தலைவர் காதர்மொய்தீன் உட்பட பல்வேறு முஸ்லீம் அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.  

ஆலோசனையில் பல்வேறு விசயங்கள் விவாதிக்கப்பட்டன. குறிப்பாக, விஜய் ஆதரவு நிலை எடுத்து தி.மு.க. கூட்டணியை நாம் பலகீனப் படுத்திடக்கூடாது என காங்கிரஸ் தரப்பில் சொல்லப்பட்டபோது, "நாங்களும் அதைத்தான் விரும்புகிறோம். ஆனால், சட்டமன்றத் தேர்தலில் முஸ்லீம்களுக்கான உரிய பிரதிநிதித்துவம் தி.மு.க. கூட்டணியில் கிடைக்க வேண்டும். அதாவது, கூட் டணியில் முஸ்லீம் கட்சிகள் அனைத்திற்கும் சேர்த்து 15 முதல் 20 சீட்டுகள் ஒதுக்கப்பட வேண் டும். இதற்கான முயற்சியை காங்கிரஸ் எடுக்கவேண் டும். இல்லையேல், த.வெ.க. (விஜய்) கூட்டணிக்கு நாங்கள் செல்வது தவிர்க்கமுடியாததாகிவிடும்' என முஸ்லீம் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்''’என்று சுருக்கமாக விவரிக்கிறார்கள். 

தி.மு.க. கூட்டணிக்கு எதிராக த.வெ.க.வை ஆதரித்து முஸ்லீம் அமைப்பு களுடனான இப்படியொரு ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டதை முன்கூட்டியே அறிய உளவுத்துறையினர் கோட்டை விட்டுவிட்டனர். கூட்டம் நடந்த பிறகே அது குறித்த தகவல்கள் அறிந்து, விசாரித்து முதல்வருக்கு நோட் போட்டுள்ளது உளவுத்துறை.